Advertisment

போலீசார் முன்பு விஷம் குடித்த பெண்! 

The woman who drank poison before the police

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ளது கடுவனூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்குச் சொந்தமான இடம் குறித்து பக்கத்து இடத்தைச் சேர்ந்தவர்களுடன் ஜெயலட்சுமிக்குபிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி ஏற்கனவே புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரது புகார் தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனமுடைந்து கவலையில் இருந்துள்ளார்.

Advertisment

ஜெயலட்சுமி இதுகுறித்து காவல் நிலையத்திற்குப் பலமுறை நடையாய் நடந்தும் அவரது புகாரின்மீது உரிய விசாரணை நடத்தப்படவில்லை. இதனால் பொறுமையிழந்த ஜெயலட்சுமி, நேற்று (29.06.2021) சங்கராபுரம் காவல் நிலையம் முன்பு பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுகுறித்து தலைமைக் காவலர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஜெயலட்சுமி மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். தான் அளித்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றவேதனையின் காரணமாக விஷம் குடித்த பெண்ணின் மீதே போலீசார் வழக்குப் பதிவுசெய்த சம்பவம் சங்கராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

kallakurichi poison police station
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe