style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் இறந்துள்ளார்.
திருவாரூர் கோட்டூரில் கோமளாபேட்டை என்ற இடத்தில் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 65 வயதான பக்கிரியம்மாள் உயிரிழந்துள்ளார். நிவாரண முகாமில் போதிய வசதிகள் இல்லை என்று ஏற்கனவே மக்கள் குறைகளை வைத்திருந்த நிலையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் முகாமில் தங்கியிருந்தபக்கிரியம்மாள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி முகாமில் 10 நாட்களாக தங்கியிருக்கிறார் பக்கிரியம்மாள். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.