ஓடும் பேருந்தில் பேனா கத்தியால் தன்கழுத்தை தானே அறுத்துக்கொண்ட பெண்! அதிர்ந்த பயணிகள்!

சேலம் அருகே ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பேனா கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு சம்பவம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரில், தொழிலாளர் இல்லம் பகுதியைசேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சந்தானம். அவரது மனைவி அகல்யா. இவர்களுக்கு காயத்திரி என்றஒரே ஒரு மகள் இருந்தார். காயத்திரி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வேறு சமூகத்தை சேர்ந்த நபரை பெற்றோர்களை மீறி திருமணம் செய்துகொண்டார்.

 Woman cutting herself with a pen knife on a running bus! Shocked travelers!

அதிலிருந்து பெற்றோர்கள் இருவரும் காயத்திரியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நாளைடைவில் காயத்திரியின் தாயான அகல்யா அவரை ஏற்றுக்கொள்ள தந்தையான சந்தானம் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. மகளை கணவர் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது அகல்யாவிற்கு பெரும் சோகத்தையும், மனஉளைச்சளையும்ஏற்படுத்தியிருந்தது.

 Woman cutting herself with a pen knife on a running bus! Shocked travelers!

இந்நிலையில் நேற்று நெத்திமேட்டில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு தனியார் பேருந்தில் சென்ற அகல்யா அவரது மகளான காயத்திரி வசிக்கும் குள்ளமுடியானூர் ஊரின் பெயர்பலகையை பேருந்தில் இருந்தபடிபார்த்த பிறகு மனமுடைந்து கையில் இருந்த பேனா கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால் ரத்தம் பீறிட்டது. அதிர்ந்த பயணிகள் அலறியடித்துகொண்டுஅவரை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து கருமலைகூடல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

bus Mettur Neck cut Salem
இதையும் படியுங்கள்
Subscribe