Skip to main content

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் லஞ்சப்பணத்துடன் பெண் கவுன்சிலர் - நேர்மைக்கு வந்த சோதனை!

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

Woman councilor with bribe money in Sivakasi Corporation meeting
இந்திராதேவி

 

‘நேர்மையின் விலை என்ன?’ என்று நேர்மையாளர்களிடமே பேரம் பேசும் காலம் இது. அரசுத்துறையிலோ அரசியலிலோ ஒருவர் நேர்மையைக் கடைப்பிடித்தால் பலவித சோதனைகளுக்கு ஆளாக நேரிடும். சிவகாசி மாநகராட்சியில்  தன்னை  ‘நேர்மையான கவுன்சிலர்’ என்று தொடர்ந்து அடையாளப்படுத்திவரும் 5-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் இந்திராதேவிக்கும் ஒரு சோதனை வந்தது.  

 

7 மாதங்களுக்கு முன் 5-வது வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் 11 பேர், தங்களது வீடுகளுக்கு தீர்வை செலுத்த மாநகராட்சி அதிகாரியிடம் மனு அளித்தனர்.  அந்த மனு மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு மனுவுக்கும் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இதற்கு தீர்வுகாண, நேர்மையான கவுன்சிலர் இந்திராதேவி ஒரு காரியம் செய்தார். அந்த 11 பேரிடமும் ரூ.10 ஆயிரம் வீதம் வசூலித்து, மொத்த பணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துடன் சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் கலந்துகொண்டார். 

 

Woman councilor with bribe money in Sivakasi Corporation meeting

 

மாநகராட்சி கூட்டத்தில் அந்தப் பணத்தைக் காட்டி,  “கமிஷனரிடம் கொடுக்கலாம் என்றுதான் இந்த லஞ்சப்பணத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். இன்றைக்கு அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. என் வார்டு மக்கள் அளித்த மனுவுக்கான வேலையை முடித்துக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இந்தப் பணத்தைக் கொடுக்கப் போகிறேன்.” எனப் பேசி அந்த மாமன்றத்தை அதிரவைத்தார்.   

 

இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி (திமுக) மேயர் சங்கீதாவிடம் நாம் பேசியபோது “சம்பந்தப்பட்ட செக்ஷன் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்.  

 

Woman councilor with bribe money in Sivakasi Corporation meeting
மேயர் சங்கீதா

 

கவுன்சிலர் இந்திராதேவியின் நேர்மை குறித்து நம்மிடம் பேசிய கவுன்சிலர் ஒருவர்  “முகநூல் பக்கத்திலும் கூட தன்னை  ‘நேர்மையான கவுன்சிலர்’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறார். ஓட்டுக்கு பணம் கொடுத்துத்தானே இவரால் கவுன்சிலராக முடிந்தது. நேர்மையான கவுன்சிலர் என்று சொல்லிக்கொண்டு, மக்களிடமிருந்து லஞ்சப்பணத்தை பெற்று, மாமன்றம் வரைக்கும் கொண்டுவந்தது தான் நேர்மையோ? லஞ்சம் வாங்குவது குற்றம் என்றால், லஞ்சம் கொடுப்பதும் குற்றம்தானே? லஞ்சத்தை நியாயப்படுத்தவில்லை. அதேநேரத்தில், லஞ்சப்பணத்தை காண்பித்து பரபரப்பை ஏற்படுத்தி ‘பப்ளிசிட்டி’ தேடுவது எந்தவிதத்தில் சரி? லஞ்ச ஒழிப்புத்துறை இருக்கிறது. ஒரு புகார் மூலம் முடிந்துவிடக்கூடிய விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவதற்கு, ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் இந்திராதேவியை பின்னால் இருந்து தூண்டிவிடுகிறார். ஆளுங்கட்சியில் இருந்துகொண்டே ஆட்சிக்கும் கட்சிக்கும் கெட்டப்பெயர் ஏற்படுத்துவதுதான் நேர்மையோ?” என்றார் ஆதங்கத்துடன்.  

   
நேர்மை என்ற உயரிய அறத்தைக் கடைப்பிடிப்பவர்களிடம் இயல்பாகவே ஒரு கம்பீரம் வெளிப்படும்.

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.