Advertisment

பெண் காவலரின் துப்பாக்கி வெடித்து விபத்து-சென்னை ஆர்.பி.ஐயில் பரபரப்பு 

rbi

சென்னை ரிசர்வ் வங்கியில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரின் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பகுதி எப்பொழுதுமே முழுவதுமாக போலீசார் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென ரிசர்வ் வங்கியின் உள்ளே ஆபத்து அலாரம்ஒலித்துள்ளது. இதனால் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துவிட்டதோ என பணியில் இருந்த பெண் காவலர் தர்ஷினி பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியில் தோட்டாக்களை லோடு செய்துள்ளார். பின்னர் ஆர்.பி.ஐ வளாகம் முழுவதும் சென்று நோட்டமிட்டு பார்ப்பதில் அந்த பகுதியில் யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

Advertisment

பின்னர் காவலர் தர்ஷினி லோடு செய்த தோட்டாவை துப்பாக்கியில் இருந்து எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்தது. இதில் குண்டு சுவர் மீது பாய்ந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

gun police RBI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe