தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் நடந்த நினைவு நாள் நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதால் ஆதரவும்,எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.இந்த நிலையில் சென்னை திருநின்றவூரை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் இயக்குனர் ரஞ்சித் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Advertisment

pa.ranjith

அதில் தனக்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காக ராஜராஜ சோழன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில்பேசி இருப்பதால் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.கலைச்செல்வி என்பவர் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்படத்தக்கது.