/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/14_143.jpg)
ஈரோடு இடையன் காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் சுகந்தி. இவரது கணவர் சந்திரசேகர். பிசினஸ் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று(26.6.2024) காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சுகந்தி திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுகந்தியை தனியாக அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், “தனது கணவர் தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார். முதலமைச்சர் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கூறினார். இதனை அடுத்து சுகந்தியை போலீசார் விசாரணைக்காக சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது சுகந்தி கூறும் போது, “கடந்த அக்டோபர் மாதம் தனது மகன் தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் தனது மாமியாரும் தற்கொலை செய்து கொண்டார். தற்போது என்னை எனது கணவர் கொலை செய்ய முயற்சிக்கிறார்” என்றார்.
இது தொடர்பாக புகார் அளியுங்கள். நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதனை ஏற்று அவர் புகார் அளித்தார். கலெக்டர் அலுவலகத்தில் பெண் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)