Published on 28/07/2021 | Edited on 28/07/2021

நடிகர் விஜய் ரசிகர் மன்ற பெண் நிர்வாகி மீது வரதட்சனை புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருமழிசையை சேர்ந்த திவ்யா என்பவருக்கும் முத்து என்பவருக்கும் 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது திவ்யா தரப்பில் வரதட்சணையாக 200 சவரன் நகை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு மீண்டும் பணம் கேட்டு தன்னுடைய கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும் திவ்யா சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மகளிர் அணி மாவட்ட செயலாளராக இருக்கக்கூடிய ஏஞ்சல் என்பவருடன் முத்து திருமணத்தை மீறிய பந்தத்தில் உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள திவ்யா ஏஞ்சலும் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்துள்ளார்.