Woman with children seeking refuge from Sri Lanka  Police investigation

Advertisment

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக இப்போராட்டம் நீடித்து வரும் நிலையில், சிலர் அங்கிருந்து கடல் மார்க்கமாக தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர்.

ஏற்கனவே 10 குடும்பத்தைச் சேர்ந்த 39 பேர் அடைக்கலம் தேடி தமிழகம் வந்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பெண் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தமிழகம் வந்துள்ளார். கடல் மார்க்கமாக தனுஷ்கோடி வந்துள்ள அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மண்டபத்தில் உள்ள முகாமில் அவர் தங்க வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.