Skip to main content

11 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டிற்கு வந்த பெண்..! 

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

The woman who came home after 11 years ..!

 

பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் பகுதியில் உள்ள தீரன் நகரில் கடந்த 2015ஆம் ஆண்டு வேலா கருணை இல்லம் துவக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இந்தக் கருணை இல்லத்தில், மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்று இருக்கும் நபர்களை மீட்டுவந்து பராமரிப்பது, அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவற்றை செய்துவருகின்றனர். 

 

இந்நிலையில், அந்நகரில் இருந்த ஒரு பெண்ணை மீட்டு கருணை இல்லத்தில் தங்கவைத்து பராமரித்துவந்தனர். அந்தப் பெண்ணுக்குத் தொடர்ந்து மனநிலை சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தப் பெண் கடந்த மாதம் முற்றிலும் குணமடைந்துள்ளார். அவரிடம் பெரம்பலூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண், தன் பெயர் லட்சுமி என்றும் தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த நரசையா தனது கணவர் என்றும், மூன்று மகள்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

 

இதையடுத்து, பெரம்பலூர் போலீசார் லட்சுமியின் ஃபோட்டோவை தெலங்கானா மாநில போலீசாருக்கு அனுப்பிவைத்துள்ளனர். உடனே தெலங்கானா போலீசார்  நரசையாவை சந்தித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் போலீசாரிடம், “கடந்த 2010ஆம் ஆண்டு என் மனைவி லட்சுமி காணாமல் போனார். உள்ளூர் போலீசில் அப்போதே புகார் கொடுத்திருந்தேன். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், சில மாதங்கள் கழித்து அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடலை எனது மனைவி எனக் கூறி என்னிடம் போலீசார் ஒப்படைத்தனர். அந்தப் பெண் உடலுக்கு நான் இறுதி சடங்குகள்கூட செய்துவிட்டேன். ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு எனது மனைவி உயிரோடு இருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறியுள்ளார். 

 

இதையடுத்து, நரசையாவை பெரம்பலூர் அழைத்து வந்து கருணை இல்லத்தில் இருந்த அவரது மனைவி லட்சுமியை நேரில் காட்டியதும், அவர் மனைவியைக் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார். லட்சுமிக்கும் தனது கணவரை அடையாளம் தெரிந்து சந்தோஷத்தில் கண்ணீர் வடித்துள்ளார். கணவன் மனைவி இருவரும் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.