Skip to main content

தகாத உறவால் ஆற்றில் புதைக்கப்பட்ட பெண்...!

காவல்நிலையத்தில் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கொலை செய்து புதைக்கப்பட்ட நிலையில் இன்று சிவகங்கை மாவட்டம் வடகீழ்குடி ஆற்றுப்படுகையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
 

police


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகிலுள்ள விளானூர் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (48). இவருடைய கணவர் பாலசந்தர் இறந்து பல வருடங்களாகிவிட்ட நிலையில், தன்னுடைய மகன் மற்றும் மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த இவர், தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் வாங்கி வருவதாக இவர் கடந்த 4.09.19 புதன்கிழமையன்று வீட்டை விட்டு வெளியில் சென்றவர் திரும்பவில்லையென்பதால் இவரது மகன் பால்வண்ணச்சாமி "தனது தாயை காணவில்லை" என ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். 

 

police


காவல்துறையினர் விசாரித்து வந்தநிலையில், பஞ்சவர்ணத்துடன் அடிக்கடி மொபைல் போனில் பேசிய காளிமுத்து சிக்கியுள்ளான். அவனை தொடர்ந்து விசாரிக்கவே, தனது நண்பர்கள் குமார் மற்றும் லனின்பாய் ஆகிய இருவருடன் சேர்ந்து பஞ்சவர்ணத்தை கொலை செய்து சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்குட்பட்ட வடகீழ்குடி ஆற்றுப்படுகையில் புதைத்தது ஒப்புக்கொண்டுள்ளான். கொலையாளி காளிமுத்து அடையாளம் காட்ட புதைத்து மறைக்கப்பட்டு சிதிலமடைந்த நிலையிலுள்ள பஞ்சவர்ணத்தின் பிணத்தையும், ரூ.லட்சம் பணம் மற்றும் ஏழரைப் பவுன் நகையையும் கைப்பற்றியுள்ளது காவல்துறை.

 

police


முதன்மைக் கொலைக்குற்றவாளியான காளிமுத்து காவல்துறையினரிடம் கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்திலோ., " எனக்கும் பஞ்சவர்ணத்திற்கும் நெருங்கிய உறவு உள்ளது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி கொடுக்கல் வாங்கலும் உண்டு. தற்பொழுது கடுமையான கடனில் இருப்பதால் அவரிடமிருந்து நகைகளை கேட்டேன். முதலில் தருவதாக கூறியவர் அதற்கடுத்து இல்லை என மறுத்துவிட்டார். இதனால்," என்னுடைய நகை காரைக்குடியில் அடகில் உள்ளது. அது பெரிய சங்கிலி. ஏறக்குறைய 25 பவுன் தேரும். தற்பொழுது ஏலத்திற்கு வரவுள்ளது. அதனால் நீ உன்னிடமுள்ள நகைகளைக் கொண்டு அடகு வைத்து பணத்தைக் கொடு. அந்தப் பணத்தை கொண்டு என்னுடைய சங்கிலியை மீட்டு உன்னிடமே அந்த சங்கிலியைத் தந்துவிடுவேன்." என ஆசை வார்த்தைக் கூறவும் சம்பவத்தினத்தன்று என்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்து நகை அடகு வைத்து பணத்துடனே வந்தார். 

நானும் அறந்தாங்கி வழியாக காரைக்குடி கூட்டிட்டு வந்து அடகுக் கடைக்கார ஆள் இல்லை என பொய் கூறி, தேவக்கோட்டை வழியாக மீண்டும் சொந்த ஊருக்கு கூட்டி சென்றேன். இருட்டிய நேரம் என்பதால் அது எனக்கு சாதகமானது. மீண்டும் நெருக்கமானோம். முன்னரே நான் தீட்டிய திட்டத்தின் படி வடகீழ்குடி ஆற்றுப்படுகை பக்கம் என்னுடைய கூட்டாளிகள் அங்கு காத்திருந்தார்கள். இந்தவேளையில் என்னுடைய கூட்டாளிகளை வைத்து அவளை மிரட்டிப் பார்த்தேன். மசியவில்லை. வேறு வழியில்லாததால் மூவருமாக சேர்ந்து கொலை செய்தோம். என்னுடைய செல்போன் காட்டிவிட்டது." என்றிருக்கின்றான் அவன்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்