திண்டுக்கல் அருகே மாற்றுத்திறனாளியை பெண் ஒருவர் கொடூரமாகத்தாக்கித்துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே வசித்து வருபவர் சந்திரா. இவரது கணவரின் அண்ணன் மகன் மணிகண்டன். மாற்றுத்திறனாளியான இவர் அரசிடம் இருந்து மாதம் தோறும் உதவித்தொகை பெற்று வருகிறார். மேலும் மணிகண்டன் பேரில் காலி வீட்டு மனை ஒன்றும் உள்ளது.
இந்த நிலையில், மணிகண்டனுக்குஅரசிடம் இருந்து வரும்மாதாந்திர உதவித்தொகை மற்றும் அவர் பேரில் உள்ள காலி வீட்டு மனையைக்கேட்டு சந்திரா மணிகண்டனை அடித்துகொடூரமாகத்துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அந்தவீடியோவை பலரும் பகிர்ந்து சந்திரா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.