சென்னையில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளும் வறண்டு விட்டதால் சென்னை வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.இதனால் சென்னையில் தண்ணீருக்காக வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு பெண்கள் பரிதவித்து வருகின்றனர்.மேலும் சில ஐ.டி நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் படி தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

water

Advertisment

Advertisment

இந்த நிலையில், சென்னை அனகாபுத்தூர் அமரேசன் நகரில் தண்ணீர் பிரச்னையில் சுபாஷினி என்ற பெண்ணை சபாநாயகரின் ஓட்டுநர் ஆதிமூலராமகிருஷ்ணன் கத்தியால் குத்தியுள்ளார். சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் ஆதிமூலராமகிருஷ்ணன் அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.இதனையடுத்து சபாநாயகரின் ஓட்டுனரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.