Woman arrested in POCSO

16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் மானாமதுரையில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கிருஷ்ணராஜபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுவனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பேச்சிமீனாள் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பேச்சி மீனாளுக்குத்திருமணமாகி கணவர் உள்ள நிலையில், அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறுவன் பயந்துள்ளான். தொடர்ந்து சிறுவனின் நடத்தையில் மாற்றம் இருப்பதைக் கண்டறிந்த பெற்றோர், அவனிடம் இது குறித்து விசாரித்தனர். அப்பொழுது தனக்கு நடந்தவைகுறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.

Advertisment

உடனடியாக மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பேச்சி மீனாள் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் பேச்சி மீனாளை கைது செய்துள்ளனர்.