Advertisment

நகைக்காக நடந்த கொடூரம்; சிக்கிய பெண்!

Woman arrested for incident old woman for jewelry

அரியலூர்மாவட்டம் செந்துறை அருகில் உள்ள இலங்கைச்சேரி கிராமம் தெற்குத்தெருவில் வசித்து வந்தவர் பவளக்கொடி(65). இவர் கடந்த வியாழக்கிழமை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து செந்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், பவளக்கொடி இறந்தது குறித்து சந்தேக மரணம்என்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

Advertisment

அதே பகுதியைச் சேர்ந்த பவளக்கொடியின் உறவினர், செந்தில்குமாரின்மனைவி சரஸ்வதி கொலைக்கு காரணம்எனத் தெரியவந்துள்ளது. மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில், பவளக்கொடியின் வீட்டுக்குச் சென்ற சரஸ்வதி மருத்துவச் செலவுக்கு அடமானம் வைக்க அவர் வைத்திருந்த நகையை கேட்டதாகவும், பவளக்கொடி நகையைத் தர மறுத்ததால் அவரது கழுத்தை சரஸ்வதி நெரித்துக் கொலை செய்துள்ளார்.

Advertisment

பின்பு, அவர்அணிந்திருந்த நகைகளைப் பறித்ததோடு, பவளக்கொடி வீட்டில் வைத்திருந்த ரூ.13,000பணத்தையும் சரஸ்வதி திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினா் சரஸ்வதியைகைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். நகைக்காக உறவினர் பெண்ணேமூதாட்டியை கொலை செய்த சம்பவம் இலங்கைச்சேரி கிராம மக்கள் மத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

arrested woman police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe