Advertisment

இளம்பெண் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட கொடூரம்; விசாரணையில் பகீர்

woman arrested for forcing young girl into wrong profession

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கரட்டடி பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் சத்யனுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யன் மற்றும் போலீசார் கோபி அடுத்த கரட்டடி பாளையம், சஞ்சீவ் காந்தி வீதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனையிட சென்றனர்.

Advertisment

அப்போது போலீசை பார்த்ததும் அந்த வீட்டில் இருந்த ஒரு ஆண் வெளியே தப்பி ஓடினார். பின்னர் போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 21 வயது மதிக்கத்தக்க பெண் பாலியல் தொழில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்தப் பெண்ணை விசாரித்த போது சண்முக வடிவு(60) என்பவர் தன்னிடம் ஆசை வார்த்தை பேசி என்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறினார். போலீஸ் விசாரணையில் சண்முக வடிவு பெண் புரோக்கராக செயல்பட்டு இதேபோன்று பல பெண்களை பாலியல் தொழில் தள்ளியது தெரியவந்தது.

Advertisment

பின்னர் இருவரையும் போலீசார் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசாரிடம் அந்தப் பெண்தான் பனியன் கம்பெனியில் வேலை பார்த்த போது சண்முகவடிவுடன்அறிமுகம் ஆகி என்னிடம் ஆசை வார்த்தை கூறி என்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார் என்று கூறினார். இதனையடுத்து சண்முகவடிவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உறவினர்களை வரவழைத்து அந்தப் பெண்ணுக்கு புத்திமதி கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் கோபி பகுதியில் தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்து அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனக் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Erode police woman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe