Advertisment

வாவ் காயின் முதலீட்டில் சம்பாரிக்கலாம் எனக்கூறி 18 லட்சம் மோசடி... தப்பிக்கமுயன்ற மோசடி பெண்மணி கைது!

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் இந்திராணி. இவருக்கு மாதேஷ் என்பவர் முகப்புத்தகம் மூலமாக பழக்கமானர்.இந்திராணியிடம்பிட்காயின் என்ற வாவ்காயின்வர்த்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் மாதேஷ். அண்ணா நகரில் வசித்து வரும் பத்மஜ்பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைன்ட்ஜோசப் ஆகியோர் ஆன்லைனில் வாவ் காயின்முதலீடு செய்ய உதவுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். 10 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகையின் மதிப்பு ஆயிரம் மடங்காக உயரும் என இந்திராணியிடம் ஆசையை தூண்டியதாகவும்தெரிகிறது.

Advertisment

Woman arrested for cheating over Rs 18 lakh...

இதை நம்பி 18 லட்சம் ரூபாயை பத்மஜ்பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைன்ட்ஜோசப்உள்ளிட்டோர் நடத்திவரும் நிறுவன வங்கி கணக்கிற்கு இந்திராணி அடிக்கடி மாற்றியுள்ளார். 6 மாதத்தில் முதலீடு செய்த 18 லட்சம் ரூபாய் திரும்பக் கிடைக்கும் எனக் கூறிய நிலையில் பல மாதங்களாகியும் அந்த பணம் கிடைக்கவே இல்லை. இதன் பின்னர் விசாரித்த பொழுது இந்திராணியிடம் இருந்து பெற்ற பணத்தை எந்த கிரிப்டோகரன்சியிலும் முதலீடு செய்யாமல் அவர்களை ஏமாற்றியது தெரிய வந்தது.

Advertisment

Woman arrested for cheating over Rs 18 lakh...Woman arrested for cheating over Rs 18 lakh...

பணத்தை திரும்ப கேட்டபொழுது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பொழுது வழக்குப்பதிவு செய்யாததால்சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திராணிஅளித்த மனுவில் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பண மோசடிபிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு பத்மஜ்பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைன்ட்ஜோசப் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Woman arrested for cheating over Rs 18 lakh...

இதனையடுத்து தலைமறைவாக இருந்த மூவரையும் அண்ணாநகர் போலீசார்தேடிவந்தனர். மேலும் விமானநிலையங்களின்மூலம் தப்பிச் செல்லாத வண்ணம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று சென்னை விமானநிலையத்தில் இருந்து மலேசியா தப்பிச்செல்ல பத்மஜ்பொம்முசட்டி சீனிவாசலு முயன்றுள்ளார். இவரை அடையாளம் கண்டு கொண்டவிமானநிலையஅதிகாரிகள் அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Woman arrested for cheating over Rs 18 lakh...

இதையடுத்து அண்ணாநகர் போலீசார் விமான நிலையத்திற்கு சென்று மோசடியில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடு தப்ப முயன்றபத்மஜ்பொம்முசட்டி சீனிவாசலுவைகைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான இரண்டு பேரையும் அண்ணாநகர் போலீசார் தேடி வருகின்றனர்.

arrest police airport Chennai cheating money
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe