Advertisment

அம்மாவுடன் திருமணத்தை மீறிய உறவு; மகள் கர்ப்பம்... ஆட்டோ ஓட்டுநர் கொலை

woman arrested in auto driver passed away case

கடலூர் அருகே உள்ள குறவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவமணி (வயது 37). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி சத்யா. இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். நேற்று மாலை சிவமணி வீட்டில் இருந்த போது ஆட்டோ சவாரிக்கு வருமாறு செல்போன் அழைப்பு வந்துள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து சிவமணி தனது மனைவியிடம் சவாரிக்கு செல்வதாக கூறிவிட்டு ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அதன்பின்னர் அன்று இரவு முழுவதும் சிவமணி வீடு திரும்பவில்லை. கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சத்யா, கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவர் எடுத்து பேசவே இல்லை.

Advertisment

பதறிப்போன அவரது மனைவி சத்யா, தனது உறவினர்கள் உதவியுடன் சிவமணியை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால், எங்கு தேடியும் சிவமணி கிடைக்கவில்லை. இந்த நிலையில் மறுநாள் காலையில் சிவமணி எஸ்.புதூர்-ராமாபுரம் வாழைத்தோப்பில் பிணமாக கிடந்துள்ளார். இதனை அந்தவழியாக சென்ற விவசாயிகள், பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார், சிவமணியின் உடலை சோதனை செய்தனர். அப்போது அவரது கழுத்து அறுக்கப்பட்டும், உடலின் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களும் இருந்துள்ளன. அதன்பின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் சிவமணியின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது அதில் அவருடன், கடைசியாக பேசியது ஒரு பெண் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த எண் யாருடையது என ஆய்வு செய்து வனிதா என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் அந்தப் பெண் ஒரு சாராய வியாபாரி என்றும், இவருக்கும் சிவமணிக்கும் வெகு நாட்களாக திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துவந்துள்ளது. அடிக்கடி வனிதாவின் வீட்டுக்கு சென்று வந்த சிவமணி நாளடைவில் வனிதாவின் மகளையும் ஆசை வார்த்தைகள் கூறி அவரிடம் பழகி அவரை கர்ப்பம் ஆக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வனிதா, சிவமணியை வரவழைத்து தனது கூட்டாளிகளின் உதவியோடு கொலை செய்து, அவரது உடலை வாழை தோப்பில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வனிதாவை கைது செய்த போலீசார், இச்சம்பவத்தில் வனிதாவுக்கு உடந்தையாக செயல்பட்ட மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe