Advertisment

தூத்துக்குடியில் தமிழிசையை அவதூறாக பேசியதாக பெண் கைது! - 2 பிரிவுகளில் வழக்கு!

தூத்துக்குடி விமானநிலையத்தில் பாஜக மற்றும் தமிழிசையை அவதூறாக பேசியாதாக சோபியா என்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றிருந்த போது அதே விமானத்தில் வந்த இளம்பெண் ஒருவர், பாஜக ஒழிக.. பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று விமானத்துக்குள்ளேயும், தூத்துக்குடி விமான நிலையத்திலும் முழக்கமிட்டுள்ளார்.

Advertisment

இதனால், ஆத்திரமடைந்த தமிழிசை அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான நிலைய போலீசார் தமிழிசையை சமாதானப்படுத்தினர். பின்னர் அந்த இளம்பெண் மீது புகார் அளித்த தமிழிசை அங்கிருந்து தென்காசி புறப்பட்டு சென்றார்.

பின்னர் நடந்த விசாரணையில், அந்த பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா என்பதும், கனடாவில் பயின்று வரும் அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்ததும் தெரியவந்தது. இந்நிலையில், சோபியா மீது புதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் 290, 505 என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

tamilisai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe