Vairamuthu

Advertisment

திமுக தலைவர் கலைஞர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை கவிஞர் வைரமுத்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

லட்சம் செயல்களை அற்றிவிட்டு சென்றிருக்கிறார் கலைஞர். கலைஞர் பிறந்தபோது இருந்த தமிழ்நாடு வேறு, வளர்ந்த போது இருந்த தமிழ்நாடு வேறு, அவர் நிறைந்த போது இருக்கும் தமிழ்நாடு வேறு.

தமிழ்நாட்டின் கட்டமைப்புக்கும், புறவளர்ச்சிக்கும், அகவளர்ச்சிக்கும், வீழ்த்தப்பட்டவர்கள் எழுந்ததற்கும் கலைஞர் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார். கலைஞர் இல்லாமல் தமிழ்நாட்டின் இந்த உயரம் இல்லை என அவர் கூறினார்.