Advertisment

ஒரு மாதத்திற்குள் எஸ்.ஐ. தேர்வு முடிவுகள்!

Within a month S.I. Exam results

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட தாலுகா காவல், சிறப்பு காவல்படை, ஆயுதப்படை எஸ்.ஐ பணிகளுக்கு நடந்து முடிந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் மற்றும் நிலைய அதிகாரிகள், தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறைக்கான ஒருங்கிணைந்த தேர்வு 2023 க்கான அறிவிக்கை கடந்த மே மாதம் 5 ஆம் தேதி மற்றும் மே 23 ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் வெளியிடப்பட்டது.

Advertisment

இதில் சார்பு ஆய்வாளர் தாலுகா, ஆயுதப்படை, சிறப்புக் காவல்படை ஆகிய பணிகளுக்கு 621 மற்றும் நிலைய அதிகாரிகளுக்கு 129 உட்பட மொத்தம் 750 (ஆண்கள் - 559, பெண்கள் - 191) காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 722 பேர் (ஆண்கள்- 1 லட்சத்து 45 ஆயிரத்து 804 பேரும், பெண்கள் - 40 ஆயிரத்து 885 மற்றும் திருநங்கைகள் - 33பேரும்) விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி பொது விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித் தேர்வு 33 மாவட்ட மாநகர மையங்களில் நடைபெற்றது. அதே போன்று கடந்த 27 ஆம் தேதி காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை விண்ணப்பதாரர்களுக்கான துறை தேர்வு 12 மையங்களில் நடைபெற்றது. சுமார் 80 சதவீத விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுகளில் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வு முடிவுகள் சுமார் ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tnusrb
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe