Skip to main content

"மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியையேற்று உண்ணாவிரத அறிவிப்பு வாபஸ்"- பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

"Withdrawal of the fast notice after taking the oath of the District Collector"- pR Pandian's announcement!

 

திருவாரூரில் பெரியக்குடி பகுதியில் உள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கிணற்றை நிரந்தரமாக மூட அந்த நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள பெரியக்குடி பகுதியில் ஓஎன்ஜிசி கிணற்றில், கடந்த 2013- ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டதால், போராட்டத்திற்கு பின்னர், அந்த கிணறு மூடப்பட்டது. அந்த கிணறு மீண்டும் திறக்கப்படவிருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வந்த நிலையில், அந்த கிணற்றை முற்றிலுமாக மூடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மே மாதத்திற்குள் ஹைட்ரோ கார்பன் கிணற்றை முற்றிலுமாக மூடுவதற்கு ஓஎன்ஜிசி நிர்வாகம் ஒத்துக் கொண்டதாக தெரிவித்தார். 

 

மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியையேற்று, சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக காவிரி விவசாய சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு கல்லூரி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
case filed against suspended govt college principal

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் கீதா. இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராகவும் பொறுப்பு பதவி வகித்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதி மோசடி மற்றும் நிர்வாக சீர்கேடு காரணமாக எழுந்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் (01.02.2024) இவர் மீண்டும் கல்லூரியின் முதல்வராக பதவியேற்றார். அதே சமயம் தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் தனராஜன், திரு.வி.க. அரசு கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் முதல்வர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து தனராஜன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தஞ்சை மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜன் புகார் தெரிவித்துள்ளார். இதனயடுத்து கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

வெடிக் கடையில் பட்டாசுகள் வெடித்து விபத்து

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

thiruvarur valanfgaimaan shop incident

 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் செந்தில் குமார் என்பவர் வெடிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக விற்பனைக்கு வைத்திருந்த வெடிகள் வெடித்து தீ மளமளவெனக் கடை முழுவதும் பரவியது. இதனால் கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

 

இது குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே சமயம் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வெடிக் கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.