Advertisment

"வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுக!" - சு.வெங்கடேசன் எம்.பி தலைமையில் காத்திருப்புப் போராட்டம்!

Withdraw - Agriculture- Act - says- su Venkatesh- madurai

புதிய வேளாண் சட்ட மசோதா மற்றும் மின்சாரச் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அகில இந்திய விவசாயிகள் சங்கப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில், காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கண்டனக் கோஷங்களை எழுப்பினர். இதில், அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ரவீந்திரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சியினர்மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.போராட்டம் நடைபெறும் நிலையில், ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisment

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சு.வெங்கடேசன், "மத்திய அரசு 19 -ஆவது நாளாக போராடிவரும் விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து, போராட்டத்தை திசைதிருப்பப் பார்க்கிறது, அம்பானி நிறுவனமும் போராட்டம் குறித்துத் தவறான கருத்துகளைக் கூறிவருகிறது, மத்திய அரசு வேளாண்சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் நீடிக்கும்" என்றார்.

farmbill su venkatesan madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe