Winners in Trichy district take office!

Advertisment

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 19ஆம் தேதி நடந்தது. அதில் பதிவான வாக்குகள் கடந்த 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி வெற்றிபெற்றவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த மாநகராட்சி, நகராட்சி கமி‌ஷனர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 65 புதிய மாமன்ற உறுப்பினர்கள், 5 நகராட்சிகளில் உள்ள 120 வார்டு உறுப்பினர்கள், 14 பேரூராட்சிகளில் உள்ள 216 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 401 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர். அதேபோல் நகராட்சி ஆணையர்களும், பேரூராட்சி செயல் அலுவலர்களும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். 35 நொடி உறுதிமொழிகளுடன் இன்று பதவி ஏற்றனர். உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் ஒரு வேட்பாளரோடு 2 நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Advertisment

மாமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வருகின்ற 4ஆம் தேதி மேயர் மற்றும் துணை மேயர்களுக்கான மறைமுக தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல் நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்வு நடைபெற உள்ளது.