Advertisment

"முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மது விற்பனை"- டாஸ்மாக் நிர்வாகம்!

publive-image

Advertisment

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பின்பற்ற வேண்டிய கரோனா தடுப்பு நெறிமுறைகள் குறித்து ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட நிலையான இயக்க நடைமுறைகள் (SOP) மற்றும் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக் கூடாது.

இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கடையில் அனுமதிக்கக் கூடாது.

Advertisment

அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் கையுறை, கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்தல் வேண்டும்.

முகக்கவசம் அணிந்து வரும் நுகர்வோர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டும்.

மேற்காணும் அறிவுரைகளைத் தவிர பல்வேறு கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிட, ஏற்கனவே அலுவலகசுற்றறிக்கைகள் வாயிலாக அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளருக்கும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

coronavirus Tamilnadu TASMAC
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe