Advertisment

குடைசாய்ந்த டாஸ்மாக் லாரி; மூட்டை மூட்டையாக அள்ளிச்சென்ற குடிகாரர்கள்

wineloaded lorry with accident; Packed drunkards

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மது பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி திடீரென இரவில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து மது பாட்டில்கள் வெளியே கொட்டியது. இது குறித்த தகவல் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு எப்படியோ பரவ, சம்பவ இடத்திற்கு படையெடுத்த இளைஞர்கள் மற்றும் குடிகாரர்கள் மதுபாட்டில்களை அள்ளி சென்றனர். அங்கிருந்த ஊழியர்கள் குடிகாரர்கள் அள்ளிச் சென்ற மது பாட்டில்களை தேடி தேடி பிடித்து பறிமுதல் செய்தனர்.

Advertisment

கீழே விழுந்த மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல மற்றொரு மாற்றுவாகனம் கொண்டுவரப்பட்டது. அந்த வாகனத்தில் இடமில்லாததால் குறைந்த அளவிலேயே மது பாட்டில்கள் ஏற்றப்பட்டது. மற்ற பாட்டில்கள் அங்கேயே போடப்பட்ட நிலையில், மீண்டும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடிகாரர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து பீர் மது பாட்டில்களை மூட்டை மூட்டையாக கட்டி எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

Chengalpattu lorry TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe