Advertisment

சரக்குடன் பிடிபட்ட கார்... கடத்திவந்தவர்கள் யார் திருவாரூர் மாவட்ட போலிஸார் திணறல்!!

காரைக்காலிருந்து கடத்தி வரப்பட்ட 1 லட்சம் ரூபாய்மதிப்புள்ள மதுபாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட காரையும் பிடித்துபறிமுதல் செய்துள்ளனர் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர்.

Advertisment

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள பேரளம் - காரைக்கால் சாலையில்பண்டாரவாடை என்ற இடத்தில் TN 50 P6498 பதிவு எண் கொண்ட கார் ஒன்று சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி நிற்பதாக பேரளம் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். உடனே விரைந்துசென்ற காவல்துறையினர் காரின் உள்ளே காயங்களுடன் யாரேனும் உள்ளனரா எனகதவை திறந்து பார்த்தபோது உள்ளே மதுபாட்டிகள் கொண்ட பெட்டிகள் மட்டுமே இருந்தது. மொத்தம் 35 பெட்டிகளில் 1680 மதுபாட்டில்கள் இருந்ததும் அவைபுதுச்சோி மாநிலம் காரைக்காலிருந்து கடத்தி வரபட்டதும் தெரிய வந்தது.

Advertisment

wine bottles smuggled in thiruvarur... police investigation

அதனைத்தொடர்ந்து மது பாட்டில்களுடன் காரையும் காவல்துறையினர் பறிமுதல்செய்தனர். அதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய் இருக்கும் என காவல்துறைதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபாட்டில்களை கடத்தி வரும் போது கார் கட்டுபாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டவுடன் காரையும்மதுபாட்டில்களையும் அப்படியே விட்டு விட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து பேரளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுதேடி வருகின்றனர்.

கடலிலேக்கூட தண்ணீர் வற்றிப்போகலாம் ஆனால் காரைக்கால் சரக்கு தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி மாவட்டங்களுக்கு கடத்துவதும், விற்பனை நடப்பது நின்றுபோகாது என்கிறார் போலீசார்ஒருவர்.

Thiruvarur police Smuggling wine
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe