காற்றாலை மோசடி வழக்கில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Advertisment

கோவை வடவள்ளியில் கடந்த 2009- ஆம் ஆண்டு காற்றாலை மோசடி செய்த வழக்கில் தியாகராஜன் என்பவரிடம் ரூபாய் 28 லட்சம், ஊட்டியை சேர்ந்த ஜோயோ என்பவரிடம் ரூபாய் 7 லட்சம் வாங்கியதாகவும், ஆனால் சரிதா நாயர் குறிப்பிட்ட படி காற்றாலை அமைத்து கொடுக்கவில்லை என்றும் புகார் எழுந்தது. இதையடுத்து மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisment

wind mill tower scam kerala actress saritha nair coimbatore court order

கேரளா நடிகை சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கோவை 6 வது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மூவரையும் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.

தண்டணை விபரங்கள் பிற்பகல் 3.30 மணிக்கு அறிவிக்கப்படும் என 6- வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக நடிகை சரிதா நாயர் உள்ளிட்ட மூன்று பேருக்கு தலா ரூபாய் 10,000 அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment