Wind and rain in Chennai ... Meteorological Center announcement!

Advertisment

சென்னையில் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. சென்னை ஆலந்தூர், அடையாறு, தரமணி, பெருங்களத்தூர், வண்டலூர், அனகாபுத்தூரில் மழை பெய்து வருகிறது.அதேபோல் அண்ணாநகர், ஆவடி, ஆதம்பாக்கம், குரோம்பேட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் மழை பொழிந்து வருகிறது.

பட்டாபிராம், போரூர், முகப்பேர், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு காற்றுடன் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருச்சி, சிவகங்கை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.