wilson case nia in kovai

Advertisment

கடந்த வருடம் ஜனவரி மாதம் 8-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் இருந்த எஸ்.ஐ. வில்சனை அப்துல்சமீம், தவ்பீக் ஆகிய இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வில்சன் கொலை தொடர்பாக சென்னை மண்ணடியைச் சேர்ந்த சிஹாபுதீன் என்ற நபரை, விமான நிலையத்தில் வைத்து கடந்த6-ஆம் தேதிஎன்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிஹாபுதீன் இல்லத்தில் என்.ஐ.ஏஅதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.கோவை போத்தனூரில் உள்ள அவரின்இல்லத்திற்கு சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள் தற்பொழுது சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.