Advertisment

நயன்தாரா காணாமல் போனால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா??-நீதிமன்றம் கேள்வி!!

நடிகர்கள், நடிகைகள்,பிரபலங்கள் காணாமல் போனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? சாதாரண மக்கள் காணாமல் போனால் அதற்கு நடவடிக்கை எடுக்காதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

 Will you take action if Nayanthara disappears?-The court question!

சேலத்தை சேர்ந்த மஹேஸ்வரி என்பவரின் 19 வயதுமகள் கவுசல்யா காணாமல் போனதாக திருச்செங்கோடு காவல்நிலையத்தில் நான்கு மாதங்களுக்கு முன்புபுகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி காணமல் போன பெண்ணின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வுமனுதாக்கல் செய்தனர்.

Advertisment

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையில் புகார் கொடுத்து நான்கு மாதங்கள் ஆகியும் ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. நயன்தாராபோன்ற பிரலபமான நடிகைகள் காணமல் போனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா சாதாரண மக்கள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்காதா.மாதம் மாதம் ஊதியம் பெரும்அரசு ஊழியர்கள் அதற்கான வேலையை சரியாக செய்யவேண்டும். உங்கள் வீட்டில்உள்ள பெண்கள் காணாமல் போய்விட்டால் இப்படிதான் அலட்சியம் காட்டுவீர்களா என கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பான அறிக்கையை வரும் திங்கள் கிழமை காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி வழக்குஒத்திவைக்கப்பட்டது.

highcourt police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe