Skip to main content

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 -2019  தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படுமா? -15 பேர் கைதால் எழுந்துள்ள கேள்வி!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு உறுதி செய்யட்ட நிலையில், எழும்பூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.  

நடந்த முறைகேடு நிரூபிக்கப்பட்டதால், 12 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் பண்ருட்டியைச் சேர்ந்த சிவராஜ் ஆகியோர் இடைத்தரகர்களுக்கு ரூ.7.5 லட்சம்  பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் நேற்றிரவு  கைது செய்யப்பட்டு,  எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.  விசாரணைக்குப் பிறகு, இவ்விருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பதற்கு  மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட,  இருவரும்  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  

 

 Will the TNPSC Group 4 -2018 Examination be canceled altogether?


இதுவரை மொத்தம் 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, சென்னை எழும்பூரிலுள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில்,  இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுத்து ஏமாந்த சில தேர்வர்களிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி  உள்ளன. இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து தேர்ச்சி பெறாமல் ஏமாற்றமடைந்தவர்கள் மொத்தம்  63 பேர் எனத் தெரியவந்துள்ளது.

இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம்  சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏனோ, அவர் குறித்த எந்தத் தகவலும் அறிவிக்கப்படவில்லை. தற்போது, இந்த முறைகேடு தொடர்பாக பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார், தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  

 

 Will the TNPSC Group 4 -2018 Examination be canceled altogether?

 

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேட்டில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பலர் சிக்கவிருப்பதாக அந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.  அதனால், ஒட்டுமொத்தமாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4  - 2019 தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.