Skip to main content

சென்னையில் தீவிர ஊரடங்கு அமலாகுமா? மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை! 

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

Will there be a severe curfew in Chennai? Corporation Administration Advice!

 

சென்னையில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தியது தமிழ்நாடு அரசு. பொது மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். திரையரங்குகள், கடற்கரைகள், மீன் மார்க்கெட்டுகள் ஆகியவை கட்டுப்பாடின்றி திறக்கப்பட்டதால் மக்களின் கூட்டம் பெருக்கெடுத்தது. ஆனால், கரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை இந்த இடங்களில் மக்கள் கடைப்பிடிப்பதில்லை. குறைந்தபட்சம் முகக் கவசம் கூட அணிவதில்லை. இதனால் கரோனாவின் மூன்றாம் அலை பரவுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது.

 

அதேபோல, அரசுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரி மைதானங்களை கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனங்கள் முறைகேடாக பயன்படுத்திவருகிறார்கள். குறிப்பாக, 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் தனியார் பயிற்சி மையங்கள், சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடமிருந்து ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கட்டாயத்துக்கு ஆளான தனியர் பயிற்சி மையங்கள், அந்த மாணவர்களை மைதானங்களுக்கு அழைத்துவருகிறார்கள்.

 

பொதுவாக, 15 வயதுக்குட்பட்ட மாணவர்களை கரோனாவின் மூன்றாம் அலை தாக்கும் என்பதால்தான் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு இதுவரை பள்ளிகளைத் திறக்கவில்லை. அதாவது, 15 வயதுக்குட்பட்டவர்கள் வெளியே வரக் கூடாது; வீட்டில் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள். ஆனால், கிரிக்கெட் பயிற்சி என்கிற பேரில் மைதானங்களுக்கு 15 வயதுக்குட்பட்டவர்களை தனியார் பயிற்சி மையங்கள் வெளியே அழைத்து வருவதை அரசும், சென்னை மாநகராட்சியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் மைதானங்களில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 

 

குறிப்பாக, தரமணியிலுள்ள மத்திய பாலிடெக்னிக் வளாக மைதானத்தை தனியார் கிரிக்கெட் பயிற்சி மையம் பயன்படுத்திவருகிறது. கடந்த 1ஆம் தேதி முதல் இங்கு கிரிக்கெட் பயிற்சியில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஈடுபடுத்திவருகிறார்கள். அங்கு கரோனா கட்டுப்பாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தங்களின் வருவாய்க்காக பயிற்சி என்ற பேரில் சிறுவர்களைப் பயன்படுத்துகின்றன தனியார் பயிற்சி நிறுவனங்கள். மேலும், அரசுக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை தனியார் பயன்படுத்துவது எப்படி? என்றும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

 

மூன்றாம் அலை பரவலாம் என்கிற எச்சரிக்கை இருக்கும் நிலையில், தியேட்டர்கள், கடற்கரைகள், மீன் மார்க்கெட்டுகள், கிரிக்கெட் பயிற்சிகள் என தொடர்வது கரோனாவைப் பரப்பாதா? என்றும் கரோனா களப்பணியில் இருக்கும் செவிலியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

 

இதுகுறித்து அரசின் கவனத்துக்கும் சென்னை மாநகராட்சிக்கும் புகார்கள் பறந்துள்ளன. இது தொடர்பாக இரு தரப்பும் ஆலோசிக்கின்றன. இதனால் சில தீவிர கட்டுப்பாடுகளை சென்னைக்குள் அமல்படுத்தலாமா? என்று மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.