Advertisment

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? - சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில் 

Will there be curfew again in Tamil Nadu? - Health Secretary Radhakrishnan replied

தமிழகம் மட்டுமல்லாது 19 மாநிலங்களில் கரோனாபாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “அரசியல், குடும்ப நிகழ்ச்சிகளால்தமிழகத்தில் கரோனா அதிகரிக்கும் நிலை உள்ளது.அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வோர்மாஸ்க் அணிவதில்லை. அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசியைஅனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கரோனாஉறுதி செய்யப்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். தமிழகத்தில் கரோனா படிப்படியாக உயர வாய்ப்பிருக்கிறது. எனவே அனைவரும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கரோனாதடுப்பு நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாஸ்க் போடாவிட்டால் அபராதம் என்பதில் உள்நோக்கம் இல்லை. அபராதம் விதிக்கும்போதுதான் மக்கள் அதைப் பின்பற்றுகின்றனர்.”என்றார்.

Advertisment

தமிழகத்தில் மீண்டும் ஊடரங்குபிறப்பிக்கப்படஇருப்பதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, “தமிழகத்தில்மீண்டும் ஊரடங்கு அமல் போன்றவதந்திகளை நம்ப வேண்டாம்” என்றார்.

Advertisment

Radhakrishnan coronavirus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe