Will temples be open for all days? - CM advises today!

Advertisment

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13/10/2021) ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றகரோனாகட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்தஆலோசனைக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த அனுமதி; திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு அனுமதி; நவம்பர் 1ஆம் தேதிமுதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள்மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட வேண்டும்,விஜயசதசமி அன்று கோவில்களைத்திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கில் விஜயசதசமி அன்று கோவில்களைத் திறப்பது தொடர்பாக அரசே முடிவு செய்துகொள்ளலாம்எனசென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று முதல்வர் நடத்தும் ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Luhzp1435sI.jpg?itok=lhVaCMjy","video_url":" Video (Responsive, autoplaying)."]}