18 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்  

rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் தமிழகம், இலங்கை கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதே சமயம் சென்னை மெரினா, பெரம்பூர், சிட்லபாக்கம், மடிப்பாக்கம், விருகம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தரமணி, அம்பத்தூர், மேடவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (11.12.2024) காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai Rainfall Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe