Will the meeting be held in the context of conflict in ADMK?

இன்று (28/07/2022) மாலை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Advertisment

அ.தி.மு.க. தலைமைத் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புகளிடையே மோதல் நீடித்து வருகிறது. இரு தரப்பும் பரஸ்பரம் மற்றத் தரப்பில் உள்ளவர்களை பதவிகளில் இருந்தும், கட்சிகளில் இருந்தும் நீக்கி வருகிறது. கட்சித் தொடர்பாக, நீதிமன்ற வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவிற்கு சென்றிருந்த எடப்பாடி பழனிசாமி, பிரதமரைச் சந்திக்க விரும்பியதாகவும், ஆனால் அதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் கூட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (28/07/2022) சென்னை வருகிறார். கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் பிரதமர் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தன்னை ஒன்றாக சந்திக்க வேண்டும் என்று விரும்புவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் பிரதமர் சந்திப்பாரா, அவ்வாறு சந்தித்தால் இருவரும் ஒரு சேர சந்திப்பார்களா? (அல்லது) தனித்தனியாக சந்திப்பார்களா? எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

Advertisment