விளக்கேற்றினால் விடைபெறுமா கரோனா?-இந்திய தேசத்தின் நம்பிக்கை வெளிச்சம்!!

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தலால், வீட்டுக்குள் ஒடுங்கிப்போய்க் கிடக்கும் இந்தியர்கள், ‘கரோனா வைரஸ் கொடியதல்லவா? எத்தனை விமர்சனங்கள் எழுந்தாலும், நரேந்திர மோடி நமது பிரதமர் அல்லவா? கரோனா தடுப்பு நடவடிக்கையாக, 9 நிமிட விளக்கேற்றும் நிகழ்வுக்கு பிரதமரே நமக்கு அழைப்பு விடுத்திருக்கும்போது, அதனை ஒருமித்த மனநிலையில் விளக்கேற்றி நிறைவேற்றுவோம்.’ என்று தீர்மானித்து, இன்று இரவு 9 மணிக்கு, வீட்டுக்குள் மின்விளக்கை அணைத்துவிட்டு, வீதிக்கு வந்து விளக்கேற்றினார்கள்; டார்ச் லைட் அடித்தார்கள். சிவகாசியிலோ, வானவெடிகளை வெடிக்கச் செய்து வான் பரப்பில் வெளிச்சம் பாய்ச்சினார்கள்.

இந்திய தேசத்தின் வலிமையான நம்பிக்கைவெளிச்சம்கரொனாவின் கண்களை கூசச் செய்திருக்குமா? உலக மக்களுக்கு இத்தனை துயரத்தை தந்துவிட்டோமே என, விடைபெற அது முடிவெடுத்திருக்குமா?

corona virus India modi Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe