Advertisment

''இது திமுகவிற்கு அரசியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்''-திருமா பேட்டி!

 '' This will have a political impact on the DMK '' - Thiruma interview!

சென்னை பூர்வீக குடிமக்களை வெளியேற்றுவது திமுகவிற்கு அரசியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை அருகம்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ''சென்னையில் பூர்விகக் குடிகளை வெளியேற்றுவது வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல். அருகம்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் குடிசையில் வசிக்கும் 23 குடும்பங்களுக்கு புளியந்தோப்பு பகுதியில் வீடுகளை ஒதுக்கவேண்டும். பூர்வீக குடிமக்களை வெளியேற்றுவது திமுகவிற்கு அரசியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். கூவநதியோரம் வசிப்பவர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்புறப்படுத்துகிறோம் என்று அரசு சொன்னாலும் சென்னையில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தாமல் அந்தந்த பகுதிகளிலேயே அடுக்குமாடி குடியிருப்பை கட்டி குடி வைக்க வேண்டும் என்பதை நீண்ட காலமாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ரேஷன் அட்டை, ஆதார் போன்ற ஆவணங்கள் இருந்தும் இங்கு வீடின்றி தவிக்கும் அனைவருக்கும் வீடு ஒதுக்க வேண்டும்'' என்றார்.

Advertisment

Chennai thiruma valavan vck
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe