நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் உள்ள துலுக்கர்பட்டியைச் சேர்ந்தவர் முகமது பாத்து. அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில், தனது வீட்டிற்கான மின்கட்டணம் தனது கைபேசியில் குறுஞ்செய்தியாக வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் வீட்டிற்கான மின்கட்டணம் 91 ஆயிரத்து 130 ரூபாய் என வந்துள்ளது. மேலும் கட்டணத்தைச் செலுத்துவதற்கானக் கடைசி தேதி நவம்பர் 5 எனக் காட்டியுள்ளது.

Advertisment

இதனைத்தொடர்ந்து நாங்குநேரி மின்வாரியத்திற்கு சென்ற முகமது பாத்து, மாதம் 65 ரூபாய் மின்கட்டணம் செலுத்திய வீட்டிற்கு 91 ஆயிரமா என்றும் இரண்டு பேர் உள்ள வீட்டிற்கு 91 ஆயிரத்திற்கு மின்கட்டணம் வருவது எப்படி என்றும் கேட்டுள்ளார்.

அங்கு இருந்த அதிகாரிகள் அவரிடம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறாக ஏற்பட்டு இருக்கலாம். சில தினங்களில் சரியான கட்டணத்துடன் ரசீது வந்துவிடும் எனக் கூறிசமாதானப்படுத்தினர்.