
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் பொதுப் போக்குவரத்து, பள்ளிகள், கல்லூரிகள்காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. பொது முடக்கம் அமலில் இருந்தாலும் அவ்வப்போது சில தளர்வுகளும் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடைசியாக அறிவிக்கப்பட்டிருந்தபடி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொதுமுடக்கம்அமலில் உள்ள நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 29-ஆம் தேதி மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
29ஆம் தேதி காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்று பிற்பகல் மருத்துவக் குழுவோடும் ஆலோசனை நடத்த இருக்கிறார். இதனால் அன்று நடக்கும் முக்கிய ஆலோசனையில்தமிழகத்தில் பொது முடக்கம்நீட்டிக்கப்படுமா அல்லது தொடருமாஎன்ற கேள்விகளுக்கு விடை தெரியும். அதே போல் இ-பாஸ் நடைமுறையில் முக்கிய முடிவுகள் 29 ஆம் தேதிக்கு பிறகு எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)