
தமிழ்நாட்டில் தற்போதைக்குப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தமிழ்நாடு போக்குவரத்துத் துறை இனி புதுப்பொலிவுடன் செயல்படும். தமிழ்நாட்டில் தற்போதைக்குப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. பேருந்து நிலையங்களில் மீண்டும் அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நிதிச்சுமை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மக்களின் சேவைக்காகவே நாங்கள் செயல்படுவோம். வண்டலூர் அருகே கட்டப்பட்டுவரும் புதிய பேருந்து நிலையம் இந்த ஆட்சிக்காலத்தில் கட்டிமுடிக்கப்படும். கடந்த ஆட்சியில் தப்பு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்'' என்றார்.

அதன்பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் சென்னை சைதாபேட்டையிலிருந்து அரசுப் பேருந்தில் பயணம் செய்தனர்.
Follow Us