Advertisment

உடனடியாக நீக்கப்படுவார்கள்...?  எச்சரித்த ரஜினிகாந்த்!

 Will be removed immediately ...? Rajinikanth warned!

2017-ஆம் ஆண்டு கட்சித் தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததற்குப் பின், 2020-ன்இறுதி மாதமானடிசம்பர் 31-ல்கட்சியை அறிவிப்பதற்கானதேதியை அறிவிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்திஆகியோரை முக்கிய நிர்வாகிகளாகவும் அறிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், தற்பொழுது டிசம்பர் மாதம், இறுதியை நெருங்கி வருவதால் கட்சி அறிவிப்பு மற்றும் கட்சியின் அடிப்படை கட்டமைப்பு மேற்பார்வைகளை ரஜினிகாந்த் துரிதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளன. நேற்று முன்தினம் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோனை மேற்கொண்ட தமிழருவி மணியன், ரஜினியிடம் இருந்து வருவது மட்டுமேஅதிகாரப்பூர்வமானகட்சியின் பெயர்.மற்றவையெல்லாம் யூகங்கள்தான் எனக் கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில், கட்சி அறிவிப்புக்கு முன்னதாக, 25-ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை, மாவட்ட நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள ரஜினிகாந்த், பணம் பெற்றுக்கொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிப்பவர்கள் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

rajini makkal mandram politics rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe