A wildebeest that entered the Annamalai trek rout

Advertisment

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண்; என் மக்கள்'' எனும் யாத்திரையைத்தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தொண்டர்களுடன் நடந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கொடைக்கானல் பகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கான திட்டமிடல் ஏற்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது. இதனால் அதிகப்படியான பாஜக தொண்டர்கள் கூடியிருந்தனர்.

கையில் பாஜக கொடியுடன் காத்திருந்த நிலையில், திடீரென காட்டெருமை ஒன்று அந்த வழியில் புகுந்தது. அங்கிருந்தசிலர் பட்டாசு வெடித்ததால் காட்டெருமை துள்ளி ஓடியது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் சிதறி ஓடினர். மறுபுறம் அண்ணாமலை நடைப்பயணத்திற்காக வைக்கப்பட்டிருந்த மைக் செட்டில், 'காட்டெருமை வருவதால் பொதுமக்கள் நகர்ந்து காட்டெருமைக்கு வழி விடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்' என அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். சாலையில் சாவகாசமாக காட்டெருமை நடந்து செல்லும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.