Advertisment

காட்டு யானைகளை  விரட்ட கலெக்டருக்கு உத்திரவிட்ட ஓபிஎஸ்!

op

தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் மூனாண்டி பட்டியை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் இரண்டு காட்டு யானைகள் கடந்த சில மாதங்களாகவே நுழைந்து விவசாய நிலங்களையும், வீடுகளையும் சேதப்படுப்படுத்தி வந்தது. இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் அந்த காட்டு யானைகளால் அழிந்து வந்ததின் மூலம் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தன. அதோடு சில சமயம் அப்பகுதியில் உள்ள கிராமங் களுக்குள் நுழைந்து வீடுகளையும் சேதப்படுப்படுத்தி வந்தது. இதனால் காட்டு யானைகளை கண்டு அப்பகுதி மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் வாழ்ந்து வந்தனர்.

Advertisment

இந்த விசயம் வனத்துறை அதிகாரிகளின் காதுக்கு எட்டியதின் பேரில் தான் கடந்த மாதம் அந்த காட்டு யானைகளை பிடிக்க இரண்டு கும்கி யானைகளை கொண்டு வந்து அந்த தேவாரம் காட்டுபகுதிக்குள் அனுப்பி யானைகளை மடக்கி பிடிக்க முயற்சி செய்தும் வனத்துறையினரால் பலன் அளிக்கவில்லை.

Advertisment

இதனால் அந்த இரண்டு கும்கி யானைகளையும் திருப்பி அனுப்பி விட்டனர்.

இந்த நிலையில் தான் தற்பொழுது பெய்து வரும் மழை மூலம் காட்டுக்குள் இருந்த யானைகள் மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, கரும்பு மற்றும் விவசாய பயிர்களை அழித்து வந்தது.

இந்த விஷயத்தை அப்பகுதி மக்கள் துணை முதல்வர் ஓபிஎஸ் காதுக்கு கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் தான் இன்று தேனி மாவட்டத்திற்கு வந்த துணை முதல்வர் ஓபிஎஸ் உடனடியாக அப்பகுதிகளை பார்வையிட சென்றார். அப்பொழுது மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் துணை முதல்வர் ஓபிஎஸ்சுடன் சென்று பாதிக்கப்பட்ட தேவாரம் மூனாண்டி பட்டி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களையும் பார்வையிட்டனர். அப்பொழுது விவசாயிகளும் விளைநிலங்களுக்குள் அந்த காட்டு யானைகள் வந்து விவசாயத்தை அழித்ததையும், யானையின் தடையங்களையும் துணை முதல்வர் ஓபிஎஸ்சிடம் காட்டினார்கள். அதை கண்டு விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு உடனடியாக உடன் இருந்த கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் இப்படி விவசாய நிலங்களை அழித்து வரும் அந்த காட்டு யானைகளை உடனடியாகபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்

.

அதை தொடந்து தனது தொகுதியான போடி தொகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை மூலம் ஏற்பட்ட பாதிப்புகளையும் ஒபிஎஸ் பார்வையிட்ட அதை சீர் அமைக்க மாவட்ட கலெக்டருக்கு உத்திரவிட்டார்.

இதில் மாவட்ட அதிகிரிகள் மற்றும் மாவட்ட ஜெ. பேரவை செயலாளரும் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத், எம்.பி.பார்த்திபன், மாவட்ட செயலாளர் சையது கான், மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர்.சுப்புராஜ் உள்பட கட்சி பொறுப்பாளர்கள்

பலரும் உடன் சென்றனர்.

ops Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe