Wild elephants attack a car on the road; A viral video

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப் பகுதிகளில் காட்டு யானைகள் விளை நிலங்களை நோக்கி படையெடுப்பது மற்றும் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்வது தொடர்ந்து நடைபெறும் ஒன்றாக இருக்கிறது. அண்மையில்கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள்விளை நிலங்களில் தஞ்சம் அடைந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருவது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் புகுந்த காட்டு யானைகள் சாலையில் சென்ற காரை தாக்க முற்பட்டது. இதில் கார் முழுவதும் சேதமடைந்தது. யானை தாக்குதலுக்கு உள்ளான காரை இயக்கிய காரின் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.