Wild elephant herd of team!

Advertisment

ஓசூர் அருகே கெலமங்கலம் சாலையில் 20- க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், பிறந்து சில நாட்களே ஆன குட்டியுடன் கடந்து சென்றனர்.இதனை அந்த வழியாக வந்த பொதுமக்கள் தூரத்தில் இருந்து கண்டு ரசித்தனர்.

காட்டு யானைகள் சாலையைக் கடக்கும் போதும், இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர், விளைநிலங்கள் வழியாக வீறு நடைபோட்டு சென்ற காட்டு யானைகள், வனப்பகுதிக்குள் சென்று மறைந்தனர். அப்போது, இளைஞர்கள் சிலர் ஆபத்தை உணராமல், அங்குள்ள மின்சார கோபுரம் மீது ஏறி நின்று காட்டு யானைகள் விளைநிலங்கள் வழியாகச்செல்லும் காட்சிகளை வீடியோ எடுத்தனர்.