
தருமபுரிமாவட்டம் ஏலகுண்டூர்கிராமத்தில் உணவு தேடிவந்தபெண் யானை ஒன்று, 50 அடி ஆழம் கொண்டகிணற்றில் தவறி விழுந்தநிலையில், யானையை மீட்கும் பணியில்வனத்துறையினர் மற்றும்மீட்புப் படையினர்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தவறி விழுந்தயானை கிணற்றில் சிக்கியுள்ள நிலையில், முதலில் கிரேன் மூலம் யானையைவெளியே கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. அடுத்தபடியாகமயக்க மருந்து செலுத்தி, யானையைவெளியேற்ற வனத்துறை முயற்சி செய்தது. ஆனால், கிணற்றில் ஒருஅடிக்கும் மேலே தண்ணீர் இருக்கும் நிலையில், மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையிலும் தண்ணீரை யானை குடிப்பதால் மயக்கமடைய காலதாமதம் ஏற்பட்டது. தற்பொழுது இரண்டாம்முறையாக யானைக்குமயக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
யானை கிணற்றில் விழுந்தசம்பவத்தால் அங்கு மக்கள் அதிகமாகக் குழுமியுள்ளனர். இரவு நேரம் நெருங்குவதால் மின் விளக்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக உயிருடன்யானையைமீட்டுவிடுவோம் எனவனத்துறையினர் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us