சாவகாசமாக சாலையைக் கடந்த காட்டு யானை; அச்சத்தில் உறைந்த மக்கள்

A wild elephant casually crossing the road; People frozen in fear

பவானி பகுதியில் வனத்திலிருந்து வெளியே வந்த ஒற்றை யானைசர்வ சாதாரணமாக சாலையில் நடந்து சென்று கடைகளை உடைக்க முயலும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே குடியிருப்புப் பகுதியில் திடீரென காட்டு யானை ஒன்று புகுந்தது. மெதுவாக நடந்து மெயின் சாலையைக் கடந்த யானை, அங்கு சாலையோரம் இருந்த ஒவ்வொரு கடைகளுக்கும் வரிசையாகச் சென்று தாழிடப்பட்டிருந்த கடையின் கதவுகளை உடைக்க முயன்றது. இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நிலையில், தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒற்றை காட்டு யானையின்நடமாட்டம் அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

bavanisagar Erode
இதையும் படியுங்கள்
Subscribe