wild elephant attack... Villagers Struggle

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காட்டுயானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த விவசாயியின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டைபகுதியை அடுத்துள்ள மரக்கட்டா எனும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசப்பா. இவர்வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் கால்நடைகளை மேய்க்க சென்றிருந்த நிலையில் அங்கு வந்த காட்டுயானை ஒன்று விவசாயி வெங்கடேசப்பாவை கடுமையாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த விவசாயி வெங்கடேசப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை- அஞ்செட்டி சாலையில் திரண்டு விவசாயி வெங்கடேசப்பாவின் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.